விருத்தாசலம், ஜன. 19: விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே உள்ள பெருவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் வசந்தகுமார் (24). பிஎஸ்சி படித்துள்ள இவர் கடந்த மூன்று வருடத்திற்கு முன் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அப்போது 15 வயது (தற்போது 18) சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமான நிலையில், அவருக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து வசந்தகுமார் கருக்கலைப்பு செய்துள்ளார். இது குறித்து சிறுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் வீரமணி (26). இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ள நிலையில் இவர் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சித்ராவதிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சித்ராவதி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வீரமணி மீது இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
The post சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.