மாதவரம்: கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், 45 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு புகார் ஒன்றை அளித்தார். அதில், எனது 17 வயது மகளை, 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் யார் என்பதை எனது மகள் தெரியபடுத்தவில்லை.
எனது மகளிடம் விசாரணை செய்தால் அந்த வாலிபர் யார் என்று தெரியவரும், என அதில் கூறியிருந்தார். இதன் அடிப்படையில், 17 வயது சிறுமியிடம் போலீசார் விசாரணை செய்ததில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபரை கடந்த 2 வருடமாக காதலித்து வருவதாகவும், வாலிபரின் பெயர் விலாசத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபரை காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபரிடம் விசாரணை appeared first on Dinakaran.