சிறுத்தை நடமாட்டம்: அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் குழுக்களாக அனுப்பி வைப்பு

1 week ago 6

திருமலை,

திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடைபாதையில் செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர், சிறுமிகளும் வரும் பெற்றோர் மதியம் முதல் அனுமதிக்கப்படுவதில்லை. அலிபிரி நடைபாதை இரவு 9.30 மணிக்கு மேல் மூடப்படுகிறது.

இந்தநிலையில் அலிபிரி நடைபாதையில் 7-வது மைல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் எதிரொலியால், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களும், போலீசாரும் நடைபாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

மேலும் அலிபிரி நடைபாதையில் ரோந்துப்பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள், நடைபாதையில் செல்லும் பக்தர்களை கூட்டம் கூட்டமாக அனுப்பி வைக்கிறார்கள். ஒவ்வொரு குழுவிலும் 70 முதல் 100 பேர் வரை செல்ல வேண்டும், எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Read Entire Article