சிறு நீரகங்களை பாதுகாக்கும் உணவுகள்

3 months ago 27

உடலில் சேரும் நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகின்றன சிறுநீரகங்கள். ஆனால் அனைவரும் வேலைக்குச் செல்லும் சூழல், அதிக நேரம் வெளிப்புறத்திலேயே இருக்கும் கட்டாயம் என தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் வழக்கம் நிறைய மக்களிடம் குறைவாக இருக்கிறது. விளைவு சமீபகாலமாக சிறு நீரக நோய் பாதிப்புகளுக்கு ஆளாகு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவற்றை தவிர்க்கத் தண்ணீர் போதுமான அளவுபருகுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற ஆரோக்கியமான உணவை உட்கொள்வது பெரும்பாலானபிரச்னைகளை தீர்ப்பதற்கு உதவிடும். தண்ணீர் தவிர சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேறு என்னென்ன சாப்பிடலாம் எனப் பார்க்கலாம்.

முட்டைக்கோஸ்

இதில் வைட்டமின் கே உள்ளிட்ட பல பயனுள்ள வைட்டமின்கள், சேர்மங்கள் உள்ளன. முட்டைக்ேகாஸில் இயற்கையாகவே சோடியம் குறைவான அளவிலேயே இருக்கும். மேலும் கரையாத நார்ச்சத்தும் முட்டைக்கோஸில் உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்னைக்கு இடம் கொடுக்காமல் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக்க உதவி புரிகிறது.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

இதில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல்பருமன் பிரச்னையை எதிர் கொள்பவர்களுக்கு ஏற்ற உணவுப்பொருள் இது. உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காலிபிளவர்

வைட்டமின்கள் சி, கே, பி, போலேட், நார்ச்சத்து உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் காலிபிளவரில் காணப்படுகின்றன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரக நோய் அபாயங்களைத் தவிர்க்க உதவுகிறது.

வெங்காயம்

நாம் உண்ணும் அனைத்து உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படும் முக்கிய மான பொருட்களில் ஒன்று வெங்காயம். இதில் வைட்டமின் சி, பி, மாங்கனீஸ் மற்றும் ப்ரீயாடிக் நார்ச் சத்துக்கள் உள்ளன. இவை சிறு நீரகங்களை வலுப்படுத்தக் கூடியவை.

பூண்டு

பூண்டில் வைட்டமின் பி6, சி, மாங்கனீஸ் உள்ளிட்ட ஊட்டச் சத்துக்கள் நிரம்பியுள்ளன. அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டது. இதனை தினமும் உணவில் சேர்ப்பது சிறுநீரகங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உடல் உறுப்புகளுக்கும் நலம் சேர்க்கும்.

முட்டையின் வெள்ளைக் கரு

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புரதச்சத்து முட்டையின் வெள்ளைக் கருவில் அதிகமாக உள்ளது. எனவே தினமும் உணவில் முட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆப்பிள்

ஆப்பிளும் அதிக புரதச்சத்து கொண்டது. இது சிறுநீரகங்களுடன் தொடர்புடைய ஆபத்துக்காரணிகளைக் குறைக்க உதவுகிறது.

கேலே

முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்த இதுவும் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை சிறுநீரகச் செயல்பாடுகளை மேம்படுத்தஉதவுகின்றன.

பெர்ரி பழங்கள்

பொதுவாக பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவையும் சிறுநீரகங்களின் நலம் காக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் சி கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். சிட்ரஸ் பழங்கள் இயல்பாகவே வைட்டமின் நிரம்பப் பெற்றவை என்பதால் தினமும் ஏதாவதொரு சிட்ரஸ் பழத்தை உட்கொள்ள வேண்டும். சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சைப்பழம், சாத்துக்குடி போன்றவை முக்கியமானவை.

– அ.ப.ஜெயபால்

 

The post சிறு நீரகங்களை பாதுகாக்கும் உணவுகள் appeared first on Dinakaran.

Read Entire Article