சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு; கன மழையால் இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை

2 hours ago 3

குன்னூர், மே 15: குன்னூர் அருகே கன மழையால் இடிந்து விழுந்த வீட்டின் தடுப்பு சுவரை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பார்த்நகர் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2023 ம் ஆண்டு நவம்பர் பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள செலின் என்பவர் வீட்டின் முன்புறம் உள்ள தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

இதனால் செலின் வீட்டு வாசல் மற்றும் அப்பகுதியில் உள்ள நடைபாதை மழையால் அடித்துச்சென்றது. அப்போதைய நிலைக்கு ஏற்றவாறு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மண் மூட்டைகள் அடுக்கி வைத்து, சீரமைத்தனர். ஆனால் மழைக்காலம் நிறைவடைந்த பின்னர், தடுப்பு சுவர் ஏற்படுத்தி தரப்படும் என்று ஊராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை வருடங்கள் கடந்தும் இதுவரை தடுப்பு சுவர் அமைக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக ஊராட்சி சார்பாக பாரத் நகர் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வரும் சூழலில் இந்த பணிகளை மட்டும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் செலினின் வீடு அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குடியிருப்பு என்பதால் இந்த சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை செய்வதற்கு முன் வருமா? அல்லது ஊராட்சி நிர்வாகம் முன் வருமா? என்கிற போட்டிகளும் நிலவி வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் அப்பகுதியில் அடுக்கி வைத்த மண் மூட்டைகளுடன் தொடர்ந்து மண் சரிந்து வருவதால் வீட்டின் உரிமையாளர் அச்சமடைந்துள்ளார். எனவே வீட்டின் முன்புறம் தொடர்ந்து சரிந்து விழுந்து கொண்டிருக்கும் மண் மூட்டைகளை அகற்றி விட்டு, அப்பகுதியில் தரமான தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு; கன மழையால் இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article