சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் பிரபல நடிகை

1 week ago 4

சென்னை,

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ''விஸ்வம்பரா'' தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் ஒரு சிறப்பு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிகிறது.

பாலிவுட் நடிகை மவுனி ராய் இந்த சிறப்பு பாடலில் சிரஞ்சீவியுடன் இணைந்து நனடமாட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது படத்தைப் பற்றிய பரபரப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.

இம்மாதம் இப்பாடல் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலுக்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டபோதிலும், அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகாமலேயே உள்ளது.

Read Entire Article