சிம்பு குரலில் வெளியான 'டீசல்' படத்தின் 2-வது பாடல்

2 months ago 13

சென்னை,

'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். இவர் தற்போது நடித்து வரும் படம் 'டீசல்'. ஹரிஷ் கல்யாண் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது.

இதில் ஹரிஷ் கல்யாணுடன் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பீர் கானா பாடல் வெளியாகி வைரலானது.

இப்படத்தின் 2வது பாடலை நடிகர் சிம்பு பாடி இருக்கிறார். இந்நிலையில், 'தில்லுபரு ஆஜா' என்ற இந்த பாடல் வெளியாகி இருக்கிறது.

Hit the streets, beat the drums It's time for #DillubaruAaja from #Diesel, in the voice of the one and only @SilambarasanTR_ ▶️ https://t.co/kuG8YnMWb4A @dhibuofficial musical @iamharishkalyan @AthulyaOfficial @shan_dir @ThirdEye_Films @devarajulu29 pic.twitter.com/T24OxQA4gF

— SP CINEMAS (PRODCO PVT LTD) (@thespcinemas) February 18, 2025
Read Entire Article