சிபிஎஸ்இ கல்வி அலுவலகத்தில் 212 காலியிடங்கள்

6 hours ago 1

பணியிடங்கள் விவரம்:
1. Superintendent: 142 இடங்கள். வயது: 30க்குள். தகுதி: பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. Junior Assistant: 70 இடங்கள். வயது: 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதோடு ஆங்கிலத்தில் 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். வயது வரம்பு, கல்வித்தகுதி ஆகியவை 31.01.2025 தேதியின்படி கணக்கிடப்படும். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி வழங்கப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இத் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மைய முகவரி அடங்கிய அழைப்புக் கடிதம் இ.மெயில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கட்டணம்: ரூ.800 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

www.cbse.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2025.

The post சிபிஎஸ்இ கல்வி அலுவலகத்தில் 212 காலியிடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article