சிபி750, ஹார்னெட் 1000 எஸ்பி பைக்குகள்

1 day ago 3

ஹோண்டா நிறுவனம் சிபி750 ஹார்னெட் மோட்டார் சைக்கிளை சந்தைப்படுத்தியுள்ளது. இதில் 755 சிசி டிவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9,500 ஆர்பிஎம்-ல் 92 எச்பி பவரையும், 7,250 ஆர்பிஎம்-ல் 75 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முன்புறம் ஷோவா 41 எம்எம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன்கள், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர் இடம் பெற்றுள்ளது.

பைக்கின் எடை 192 கிலோ. பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 15.2 லிட்டர். இந்த பைக்கில் 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்போர்ட், ஸ்டாண்டர்டு, ரெயின் உட்பட 4 டிரைவிங் மோட்கள், ஸ்லிப்பர் கிளட்ச், எல்இடி ஹெட்லைட் உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.8.6 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சிபி1000 ஹார்னெட் எஸ்பி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 999சிசி இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 11,000 ஆர்பிஎம்-ல் 157 எச்பி பவரையும், 9,000 ஆர்டிஎம்-ல் 107 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள், 5 அங்குல டிஎப்டி டிஸ்பிளே, 5 டிரைவிங் மோட்கள் உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.12.36 லட்சம்.

The post சிபி750, ஹார்னெட் 1000 எஸ்பி பைக்குகள் appeared first on Dinakaran.

Read Entire Article