சிபி சத்யராஜின் "டென் ஹவர்ஸ்" ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது

1 month ago 8

சென்னை,

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவரது நடிப்பில் வெளியான 'வட்டம், மாயோன், கபடதாரி, வால்ட்டர்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர் தற்போது ஆக்சன் கலந்த கிரைம் திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்கு "டென் ஹவர்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கே.எஸ் சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜெய் கார்த்திக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்த நிலையில், போதிய திரைகள் கிடைக்காததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஒரு நாள் இரவில் பேருந்தில் நடக்கும் ஒரு கொலையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்

இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Brace yourself for a very interesting, intriguing and racy ride for #TenHours in theatres from April 18th !!Watch Sneak Peek - https://t.co/BUYZOZ3VQ1Wishing the team a great success@Sibi_Sathyaraj @5starsenthilk @DuvinStudios @thinkvault_@ilaya_director@sundaramurthyks

— kiruthiga udhayanidh (@astrokiru) April 14, 2025
Read Entire Article