சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

2 days ago 1
திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் குணா என்கிற குணசேகரன். சம்பவத்தன்று இரவு மிதமிஞ்சிய மது மற்றும் கஞ்சா போதையில் வீட்டிற்கு திரும்பிய குணா, தனது மனைவி சுலோச்சனா, தாய் காமாட்சி ஆகியோரை ஆபாசமாக பேசி தாக்கி விட்டு வீட்டில் படுத்து உறங்க சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆட்டோ குணா சடலமாக கிடந்ததாக கூறி அவரது தாய் காம்ட்சியும் மனைவி சுலேச்சனாவும் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குணாவின் சடலத்தை மீட்ட போலீசார் பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணகூறாய்வு முடிந்த கையோடு போலீசாரை அழைத்து பேசிய மருத்துவர், ஆட்டோ குணாவின் கழுத்தில் ஏராளமான நக்கீறல்கள் இருப்பதாலும் அவரை யாரோ துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக கூறினர். இதையடுத்து அழுது கண்ணீர் வடித்த அவரது மனைவி சுலோச்சனா, தாய் காமாட்சி ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்த போது குணா மரணத்தின் மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது. தினமும் இரவில் போதையில் வந்து தங்களை சரமாரியாக அடித்து உதைப்பதை வாடிக்கையாக்கியதால் குணா மீது இருவருக்கும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாய் காமாட்சி தனது உறவுக்கார திரு நங்கைகளான விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ , குபேந்திரன் என்கிற நிபுயா இருவரிடமும் சொல்லி அழுதுள்ளார். அவர்கள் குணாவை கொலை செய்ய சினிமா பாணியிலான யுக்தியை கையாளலாம் என்று ஐடியா கொடுத்துள்ளனர். அதன்படி சம்பவத்தன்று தங்கள் கூட்டாளி விஜயகுமாருடன் குணாவின் வீட்டிற்கு சென்ற திரு நங்கைகள் இருவரும், போதையில் படுத்து உறங்கிய குணாவின் கழுத்தில் துப்பாட்டாவை போட்டு இறுக்கி உள்ளனர். அவர் உயிர் குழைக்க போராடிய போது கழுத்தை கையால் பிடித்து நெரித்துள்ளனர். அவர் மூர்ச்சையான நிலையில் எக்காரணத்தை கொண்டும் உயிர் பிழைத்து விடக்கூடாது என்தற்காக மருந்து இல்லாத வெற்று ஊசியின் மூலம் காற்றை குணாவின் கை நரம்பில் செலுத்தி உள்ளனர். அப்படி செலுத்தினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு முழுமையாக உயிரிழந்து விடுவார் என கருதியதாக போலீசில் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட குணாவின் கழுத்தில் துணியை சுறுக்கு போட்டு வீட்டின் படுக்கை அறையில் தொங்க விட்டு தற்கொலை நாடமாடியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article