சினிமா துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இயக்குனர் பாலாவிற்கு விழா

6 months ago 20

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், 1999-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி வெளியான சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சேது படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நந்தா, பிதாமகன், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை கொடுத்தார்.

அதன் பிறகு , தனக்கென அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் என்று பெயரெடுத்தார். இவர் தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து 'வணங்கான்' படத்தை இயக்கியுள்ளார் . இப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகிறது. இதனால் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை வருகின்ற டிசம்பர் 18ம் தேதி அன்று நடத்த இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில், வருகிற 10-ந் தேதி அன்று பாலா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதனை விழாவாக கொண்டாட அவருடைய திரைத்துறை நண்பர்கள் திட்டமிட்டுள்ளனர். இசைவெளியீட்டு விழாவுடன் சேர்த்து இயக்குனர் பாலாவின் விழாவையும் கொண்டாட உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க பல முக்கிய நட்சத்திரங்களை அழைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Read Entire Article