சித்தூர் : சித்தூரில் நடந்த மனுநீதி நாள் முகாமில் கலெக்டரிடம் 296 பேர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மனு நீதி நாள் முகாம், மாவட்ட இணை கலெக்டர் வித்யாதாரி தலைமையில் நடைபெற்றது. இந்த மனு நீதி நாள் முகாமில் 296 பேர் தங்களின் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட இணை கலெக்டரிடம் வழங்கினர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி கோரியும், நிலம் ஆக்கிரமிப்பு புகார்கள், முதியோர் உதவித்தொகை, சுடுகாட்டுக்கு பாதை வசதி வேண்டும், ரேஷன் கார்டு, இலவச வீட்டு மனை பட்டா, சுகாதார வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை மனுக்களில் தெரிவித்திருந்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட இணை கலெக்டர் வித்யாதாரி மனுதாரர்களுக்கு ஓரிரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
அதேபோல் சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது ஓரிரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த மனுநீதி நாள் முகாமில் டிஆர்ஓ மோகன் குமார், ஆர்டிஓ ஸ்ரீநிவாஸ், ஜில்லா பரிஷத் முதன்மைச் செயல் அலுவலர் ரவிக்குமார் உள்பட அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post சித்தூரில் மனுநீதி நாள் முகாம் கலெக்டரிடம் 296 பேர் கோரிக்கை மனு வழங்கினர் appeared first on Dinakaran.