
மும்பை,
அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்து இயக்கி வரும் படம் 'வ்வான்'. பாலாஜி டெலிபிலிம்ஸ் மற்றும் டிவிஎப் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் தமன்னா இணைந்துள்ளார். அவரின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது. இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
மேலும், அஜய் தேவ்கனுடன் 'ரேஞ்சர் ' படத்திலும் தமன்னா நடித்து வருகிறார். மறுபுறம், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூருக்கு ஜோடியாக 'பரம் சுந்தரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகிற ஜூலை 25-ம் தேதி வெளியாக உள்ளது.