சிங்கிரிகுடி லஷ்மி நரசிம்மர் கோயில்

7 hours ago 4

பரிகாரங்கள் என்பது பரிட்சயமானதல்ல ஆனால், ஒரு காரியம், ஒரு செயல் ஆகியவை வாழ்வில் நிகழாத தருணத்தில் அங்கு ஒரு தடை உள்ளது என்று பொருள். அந்த தடையை நீக்குவதற்கும் தடையை மாற்றுவதற்கும் ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. அந்த ஆற்றலை வழங்கக்கூடியது தெய்வங்கள் குடி கொள்ளும் கோயிலாக மட்டுமே இருக்க முடியும். அங்கு அந்தந்த தெய்வத்திற்கான ஆற்றல் சேமித்து வழிபடச் செய்வதற்கும் உணர்வதற்கு உறைவிடமாக உள்ளது. அதற்கான இடத்தை நேரத்தை காலத்தை அறிந்து வைத்திருப்பதே பரிகாரம் என்னும் பலன் தரும் அமைப்பாக ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடியில் உள்ளது லஷ்மி நரசிம்மர் கோயில். இரணியனின் துன்பங்களால் அல்லல்பட்ட சித்தர்களும் முனிவர்களும் துன்புற்றதை கண்டு கோபம் கொண்ட பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்த பின் பெருமாளின் இந்த அவதாரத்தை காண விரும்பினார்கள். இந்த அவதாரத்தை அஷ்ட நரசிம்ம ஸ்தலங்களில் கொடுத்து பிரசன்னமானார் நரசிம்மர். இந்த அஷ்ட ஸ்தலங்களில் பூவரசன் குப்பத்தை சுற்றி சோளிங்கர், நாமக்கல் அந்திலி சிங்கப்பெருமாள், பரிக்கல் சிங்கிரி கோயில் (தென் அகோபிலம்), சித்தன்ன வாடி ஆகிய ஸ்தலங்கள் ஒரே நேர் கோட்டில் உள்ளது சிறப்பாகும். வசிஷ்டர் சிங்கிரிகுடி கோயில் நரசிம்மரை நினைத்து தவம் செய்ததால் பாவங்கள் தொலைந்து பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டார்.

இங்கு, பெருமாள் மூல ஸ்தானத்தில் மூன்று நரசிம்மர்களாக அருள்பாலிக்கிறார்கள். பதினாறு (16) திருக்கரங்களுடன் இரண்யனை வதம் செய்த கோலத்தில் உக்கிர நரசிம்மர் கோலத்திலும் சிறிய உருவில் யோக நரசிம்மர் கோலத்திலும் மற்றும் மேலும், சிறிய வடிவில் பால நரசிம்மர் உருவிலும் அருள் பாலிக்கிறார்கள்.

இங்குள்ள இந்த தெய்வத்திற்கு சூரியன்,சுக்ரன்,செவ்வாய், வியாழன், சனி ஆகியவை நாமகரணம் செய்துள்ளன.

*சனி பகவான் ஜாதகத்தில் மூன்று (3ம்), ஐந்தாம் (5ம்), ஒன்பதாம் (9ம்), பன்னிரண்டாம் (12ம்) பாவகளில் இருந்தால் தொடர்ச்சியான மூன்று பார்வைகளின் காரணத்தால் நிறைய விஷயங்கள் தாமதமாகும் அல்லது தள்ளிப் போகும் அப்பேர்பட்டவர்கள் இந்த ஸ்தலத்திற்கு திருவோணம், ஏகாதசி நாளன்று அரச மரமோ அல்லது வில்வச் செடியோ நட்டு சுவாமி தரிசனம் செய்தால் எல்லாப் பிரச்னைகளும் குறைந்து நல்ல வளமான வாழ்வை பெறுவர்.

*துலாம் ராசியில் சூரியன் – சனி சேர்க்கை பெற்றவர்கள் பார்வை உள்ளவர்கள். இங்கு பரணி அல்லது பூரம் நட்சத்திரத்தன்று வித்யா குங்குமம் வாங்கி கொடுத்து செந் தாமரை மாலை தொடுத்து தரிசனம் செய்தால் வாழ்வில் வளங்களைப் பெறுவர். வழக்கு மற்றும் சொத்துப் பிரச்னைகள் இருந்தாலும் தீர்வுகள் உண்டாகும்.

*பூரட்டாதி நட்சத்திரத்தன்று மாம்பழச் சாற்றை அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் புத்திரப்பேறு உண்டாகும்.தொடர்ந்து 2 மாதத்திற்கு செய்வது சிறப்பாகும்.

*சுவாதி, சதயம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு வெற்றிலையில் தாமரை பூ மாலையும் -சுவாமிக்கு செந்தாமரை மாலையும் மஞ்சள் வஸ்திரமும் கொடுத்து அந்த வஸ்திரத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எப்படிப்பட்ட திருமணத்தடையும் விலகும்.

*அனுஷம் மற்றும் பூரட்டாதி நட்சத்திர நாளில் சுவாமியை ஒன்பது முறை வலம் வந்தால் அங்குள்ள மண்ணை உங்கள் விற்காத நிலங்களில் வைத்தால் சீக்கிரம் விற்பனையாகும். சீக்கிரம் பிரச்னைகளை தீர்க்க சிங்கிரிகுடி நரம்மரை தரிசிப்போம்.

The post சிங்கிரிகுடி லஷ்மி நரசிம்மர் கோயில் appeared first on Dinakaran.

Read Entire Article