
சிங்கப்பூர்,
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை இந்தோனேசியாவின் சபார் கரியமான் குடாமா-முகமது ரீஜா ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை இழந்த இந்திய ஜோடி சரிவில் இருந்து மீண்டு அடுத்த 2 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 19-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 1 மணி 14 நிமிடம் நீடித்தது.
இந்திய இணை காலிறுதியில் மலேசியாவின் கோக் செ பெய் - நூர் இஸ்லாதீன் ஜோடியுடன் மோத உள்ளது.