சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து சென்னையில் ரூ.100 கோடியில் அறிவியல் மையம் உருவாக்கப்படும் : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

8 hours ago 2

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பின்னர் அவர் ஆற்றிய உரையில்,

*பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சேலம், கடலூர், நெல்லையில் ஒரு லட்சம் புத்தகங்கள் கொண்ட நூலகங்கள் அமைக்கப்படும்.தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.

*பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும் . துறை ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிதியை உருவாக்கிட ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*அண்ணா பல்கலை. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டிலேயே சிறந்த பல்கலை.யாக மாற்ற ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*நாட்டில் முதல் 10 இடங்களில் அண்ணா பல்கலையை இடம்பெறச் செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் புதிய சட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.

*பொறியியல், வேளாண்மை படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு மூலம் பயிலும் மாணவர் கல்வி செலவை ஏற்க ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும்.மாணவர்கள் அதிகம் விரும்பி சேரும் பாடப் பிரிவுகளில் 15,000
இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும்.

*குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும். சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து சென்னையில் ரூ.100 கோடியில் அறிவியல் மையம் உருவாக்கப்படும். அறிவியல் மாநாட்டு கூடங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் சென்னை அறிவியல் மையம் 90 கோடியில் அமைக்கப்படும். 10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்.

The post சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து சென்னையில் ரூ.100 கோடியில் அறிவியல் மையம் உருவாக்கப்படும் : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article