சி.வி.சண்முகம் திடீர் கைது

3 months ago 14

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் சி.வி சண்முகம் எம்பி நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு எஸ்பி இல்லாதால் சி.வி சண்முகம் எம்பி திடீரென்று விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்டவளாகம் எதிரே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது சி.வி சண்முகம் எம்பி கூறுகையில், விசிக நடத்திய மதுஒழிப்பு மாநாட்டில் நான் கலந்து கொள்ள போவதாக போலியாக, தவறான தகவல் பரப்பப்பட்டது. இதுவரை நான் அளித்த 23 புகார்கள் மீது எந்த நடவடிக்கையும், வழக்குபதிவு செய்யவில்லை, என்றார். தொடர்ந்து டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்திய போது, எஸ்பி வரும் வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறினார். தொடர்ந்து சி.வி சண்முகம் எம்பியை போலீசார் கைது செய்தனர்.

The post சி.வி.சண்முகம் திடீர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article