சி.ஐ.டி.யு பிரச்சனையால் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு வருமாறு ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் அழைப்பு

1 month ago 7
சி.ஐ.டி.யு பிரச்சனையால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு வருமாறு ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், சாம்சங் நிர்வாகத்துடன்குஜராத் மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் ஊழியர்கள் சம்பள உயர்வு, போனஸ் மற்றும் சில வசதிகளைக் கோரி கடந்த 9-ந் தேதி முதல் போராடிவருகின்றனர். இதில், தமிழ்நாடு அரசு தலையிட்ட நிலையில், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சி.ஐ.டி.யு சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக பதிவு செய்ய சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொள்ளுமாறு சி.ஐ.டி.யு அமைப்பினர் கோரியதாகவும், ஆனால், ஏற்கனவே தங்கள் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கென நலச்சங்கம் இருப்பதால் சிஐடியுவை பதிவு செய்ய முடியாது என மறுத்த சாம்சங் நிறுவனம், நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது. தொழிற்சங்க பிரச்சனையை முன் வைத்து 2,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் சாம்சங் போன்ற நிறுவனம் இடம் மாறினால் பிற நிறுவனங்களும் அதையே பின்பற்ற வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தயங்குவார்கள் என தமிழ்நாடு அரசு கவலைப்படுதாக சொல்லப்படுகிறது.
Read Entire Article