சாஸ்த்ரா பல்கலை. பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் மறைவு முதல்வர் இரங்கல்

7 months ago 23

சென்னை: சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் நேற்று முன்தினம் (நவ.18) மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது கணவரும் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தருமான சேதுராமனுக்கும், மகன்கள் வைத்திய சுப்ரமணியம் (துணைவேந்தர்), சுவாமிநாதன் (புல முதன்மையர்), மகள் பிரியா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post சாஸ்த்ரா பல்கலை. பொறுப்பாளர் சந்திரா சேதுராமன் மறைவு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article