சாலையோரம் நின்று செல்போன் பேசிய பைக் ஓட்டி மீது தாக்குதல்.!

6 months ago 23
சென்னையில் சாலையில் ஓரமாக நின்று செல்போன்பேசிக் கொண்டிருந்த, இருசக்கர வாகன ஓட்டியை போக்குவரத்து காவலர்கள் முன்னிலையிலேயே சரமாரியாகத் தாக்கிய இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். பாண்டிமுத்து என்பவர் தியாகராயநகர் தணிகாச்சலம் சாலையில் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக  இன்னோவா காரில் வந்த இருவர் ஓரமாக நிற்க கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு பின்னர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. செல்போனை வாங்கி உடைத்ததுடன் பைக்கையும் உதைத்து தள்ளியதால் அங்கிருந்த பொதுமக்கள் தடுத்தபோது அவர்களுடனும் தகராறில் ஈடுபட்டதால் அதை வீடியோ எடுத்து மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
Read Entire Article