சாலையோரம் நின்ற வாகனம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து

1 week ago 2

திருவள்ளூர்,

திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு கனரக லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டிப்பர் லாரி தமிழக எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனை சாவடி அருகே வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த வாகனம் மீது மோதியது.

இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. டிப்பர் லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் டி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த அருள் (வயது 40) என்பவர் இரு லாரிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் 2 மணி நேரம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவல் அறிந்ததும் சோதனை சாவடியில் இருந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் லாரியில் சிக்கியிருந்த டிரைவர் அருளை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த அருள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Read Entire Article