திருப்பூர் , பிப்.10: திருப்பூர் மாநகரின் வாகன பெருக்கத்திற்கு ஏற்றவாறு சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என மாநகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இன்னும் இரு சக்கர வாகனங்களில் 3 பேராக பயணம் செய்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது உள்ளிட்டவை அதிகரித்து வருவதாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் மாநகரின் புஷ்பா ரவுண்டானா, மாநகராட்சி சந்திப்பு, எஸ்ஏபி சிக்னல், சந்திரபுரம் செக் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் மூன்று பேராக பயணிப்பது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பயணிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனடி அபராதம் விதித்தனர். தொடர்ந்து திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் வாகன சோதனை தீவிர படுத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் appeared first on Dinakaran.