திண்டுக்கல், மே 25: திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாண்டி தலைமை வகித்தார்.
மாவட்ட துணை தலைவர் முத்துப்பாண்டி வரவேற்றார். மாவட்ட செயலாளர் வேல்முருகன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் ஜோதி முருகன் துவக்க உரை நிகழ்த்தினார். மாநில தலைவர் சண்முகராஜா சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் சாலை பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு காலி பணியிடங்களில் பணி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தர ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்கள் 300 குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ரமேஷ் குமார், கருணாகரன், மணியன், முத்து கருப்பன், குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் கார்மேகம் நன்றி கூறினார்
The post சாலை பணியாளர் சங்க மாவட்ட மாநாடு appeared first on Dinakaran.