சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவுக்கு திரண்ட மக்கள் தை அமாவாசையான நேற்று

2 days ago 2

வேலூர், ஜன.30: தை அமாவாசையான நேற்று வேலூர் பதிவு மண்டலத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில், பதிவு செய்ய பொதுமக்கள் திரண்டனர். பத்திர பதிவு அலுவலகங்களில் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த நாட்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அதேபோல், விசேஷ நாட்களாக கருதப்படும் அட்சய திருதியை, ஆடிப்பெருக்கு போன்ற நாட்களிலும் கூடுதல் டோக்கன்கன் வழங்கப்படுகிறது. மேலும் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ நாட்கள் சனிக்கிழமைகளில் வந்தால், அந்த நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகிறது. அதன்படி, தை அமாவாசை நேற்றும், நாளை (31ம் தேதி) சுபமுகூர்த்த தினத்தில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்தது.

அதன்படி வேலூர் பதிவு மண்டலத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், செய்யாறு ராணிப்பேட்டை ஆகிய பதிவு மாவட்டங்களில 45 சார் பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதில் ஒரு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலங்களில் 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, தை அமாவாசையான நேற்று தமிழ்நாடு முழுவதும் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு சுமார் ₹230 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. இதில் வேலூர் பதிவு மண்டலத்திற்கு சுமார் ₹8 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று பத்திரப்பதிவு செய்ய 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர்.

The post சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவுக்கு திரண்ட மக்கள் தை அமாவாசையான நேற்று appeared first on Dinakaran.

Read Entire Article