'சார்' படத்தின் 'பனங்கருக்கா' வீடியோ பாடல் வெளியானது

3 months ago 16

சென்னை,

சின்னத்திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020-ம் ஆண்டு 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். தற்போது இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் 'சார்' படத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார்.

இப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுகிறது. முதலில் மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என தலைப்பிடப்பட்ட படம் ஒரு சில காரணத்தினால் தற்பொழுது "சார்" என மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

National Award Winning Director @pandiraj_dir On #SIR Produced: @pictures_sss @sirajsfocussDirector: @DirectorBosePresented by : #vetrimaaran @GrassRootFilmCoRelease by : #RomeoPictures @mynameisraahul pic.twitter.com/Vzohyghifr

— SSS Pictures (@pictures_sss) October 21, 2024

இப்படம் கடந்த 18-ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து அவர்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் நட்டி, மைம் கோபி, ரியோ, இயக்குனர் தமிழ், விஜய் சேதுபதி, சீமான், இயக்குனர் பாண்டியராஜ் அவர்களது பாராட்டை பதிவிட்டனர்.

இந்த நிலையில் 'பனங்கருக்கா' என்ற வீடியோ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனமான எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Experience the @Music_Siddhu magic! ✨ @gvprakash & @singersaindhavi 's mesmerizing melody #Panangaruka is out now. Link - https://t.co/0QdLRCxUZrProduced: @pictures_sss @sirajsfocussDirector: @DirectorBosePresented by : #vetrimaaran @GrassRootFilmCo pic.twitter.com/zITbPjfVJR

— SSS Pictures (@pictures_sss) October 22, 2024
Read Entire Article