சாய்ராபானுவுடன் விவாகரத்து- ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்..

2 months ago 12
சாய்ரா பானுவுடனான விவாகரத்து குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முப்பது ஆண்டுகளைக் கடப்போம் என தாங்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் வாழ்வில் அத்தனையும் எதிர்பாராத முடிவுகளாகத்தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடவுளின் சிம்மாசனங்கள் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக் கூடும் என்றும், இந்த சிதைவில் உடைந்த துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றும் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த பலவீனமான அத்தியாயத்தை தாங்கள் கடந்து செல்லும் போது, தங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
Read Entire Article