சாம்ராஜ்நகர் : சாம்ராஜ்நகர் அருகே சிறுத்தை அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாம்ராஜ்நகர் தாலுகாவின் உம்மத்தூரு கிராமத்தின் அருகில் உள்ள ஹாடியில் (மக்கள் வசிக்கும் பகுதி) தாசனூர் கிராமத்தை சேர்ந்த குரு என்பவரின் நான்கு பசுக்களை தமது தோட்டத்தின் அருகில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
இந்தநிலையில், அவர் நேற்றுமுன்தினமும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது, ஓய்வு பெற்று கொண்டிருந்த போது இரண்டு சிறுத்தைகள் வந்துள்ளது. அவைகள் இரண்டு பசுக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், பசுக்களின் கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, காயமடைந்த பசுக்களை விட்டுவிட்டு மற்ற இரண்டு பசுக்கள் மீதும் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது.
இதையடுத்து, அந்த மாடுகளும் சிறுத்தைகளிடம் தப்பி கிராமத்திற்கு ஓட்டம் பிடித்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்து வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஜோராக சப்தம் எழுப்பியுள்ளனர். இதை தொடர்ந்து, அந்த சிறுத்தைகள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
கிராமத்தில் சிறுத்தையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால், சிறுத்தைகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த வனத்துறை அதிகாரி, சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பசுக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் சிறுத்தைகள் கிராமத்திற்கு வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
The post சாம்ராஜ்நகர் அருகே சிறுத்தை அட்டகாசம் அதிகரிப்பு appeared first on Dinakaran.