சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் அல்ல.. அதுதான் மிகப்பெரிய போட்டி - சுப்மன் கில்

2 months ago 6

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டம் மட்டும் துபாயில் நடக்கிறது.

இதில் இன்று நடைபெறுகின்ற 5-வது லீக் ஆட்டத்தில் பரப எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் என்றாலே எப்போதும் இரு நாட்டு ரசிகர்களிடம் மட்டுமின்றி வீரர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பும், பதற்றமும் பற்றிக்கொள்ளும். இதேபோல் இந்த ஆட்டத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இந்திய அணியும், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க பாகிஸ்தான் அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில், "இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தனக்கென்று ஒரு சொந்த வரலாற்றைக் கொண்டுள்ளது. அவ்விரு அணிகள் மோதும்போது ஒவ்வொரு முறையும் ஆர்வம் மிகுந்த போட்டி இருக்கும். இந்தப் போட்டியைப் பார்த்து நிறைய மக்கள் மகிழ்ச்சியைப் பெற்றால் பின்னர் அதன் மதிப்பை நிர்ணயிப்பதற்கு நாம் யார்?. நாங்கள் களத்திற்கு சென்று விளையாடி எங்களுடைய அணியை வெற்றி பெற வைக்க முயற்சிக்கிறோம்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை பெரியதாக கருதுகிறேன். இருப்பினும் இறுதிப்போட்டிதான் மிகப்பெரியதாகும். ஒருநாள் கிரிக்கெட்டில் நாங்கள் கொஞ்சம் நன்றாக விளையாடுகிறோம். பாகிஸ்தான் சமீபத்திய போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அதற்காக நாங்கள் அவர்களை குறைந்த அணியாக சிந்திப்போம் என்று அர்த்தம் இல்லை" என கூறினார்.

Read Entire Article