சாம்பியன்ஸ் டிராபி தோல்வி எதிரொலி: வங்காளதேச முன்னணி வீரர் ஓய்வு அறிவிப்பு

4 hours ago 1

டாக்கா,

அண்மையில் முடிவடைந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றி கூட பெறாத வங்காளதேச அணி லீக் சுற்றுடன் நடையை கட்டியது. இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவிய நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் ஒரு புள்ளி மட்டுமே பெற்ற வங்காளதேச அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இந்நிலையில் இந்த தோல்வியின் எதிரொலியாக வங்காளதேச அணியின் முன்னணி பேட்டிங் ஆல் ரவுண்டரான மஹ்மதுல்லா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடிய மஹ்மதுல்லா 4 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றத்தை கொடுத்தார். 39 வயதான அவர், தனது சமூக வலைதள பக்கங்களில் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

மஹ்மதுல்லா வங்காளதேச அணிக்காக 239 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5689 ரன்கள் மற்றும் 52 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.


Read Entire Article