சாம்பியன்ஸ் டிராபி தொடர்; பாகிஸ்தான் அணியின் ஜெர்சி அறிமுகம்

3 months ago 12

லாகூர்,

இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் வரும் 20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தங்களது ஜெர்சிகளை அறிமுகம் செய்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் தங்களது ஜெர்சிகளை அறிமுகம் செய்து விட்டன. இந்நிலையில், டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய ஜெர்சி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

நேற்று லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியின் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிமுக நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர் கலந்து கொண்டனர்.

Read Entire Article