சாம்பியன்ஸ் டிராபி தொடர்; தலைமை இயக்க அதிகாரியை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

1 day ago 2

லாகூர்,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டதால் இந்த போட்டி திட்டமிட்டபடி அங்கு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறுநாட்டுக்கு மாற்றும் யோசனைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிப்பதால் குழப்பம் நிலவுகிறது. இந்திய அணி வராவிட்டால் ஐ.சி.சி. மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இன்னொரு பக்கம் போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தலைமை இயக்க அதிகாரியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. அதன்படி, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தலைமை இயக்க அதிகாரியாக சுமைர் அகமது சையதுவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.


Our experienced events team, which has successfully planned and executed nine multi-team HBL Pakistan Super Leagues, including last five in Pakistan, will play a vital role in ensuring the tournament's success: ICC Champions Trophy Tournament Director Sumair Ahmad Syed

Complete… pic.twitter.com/GsK9X63qbl

— Pakistan Cricket (@TheRealPCB) November 21, 2024

Read Entire Article