சாம்பியன்ஸ் டிராபி : கோப்பை சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி.

2 hours ago 2

துபாய்,

8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டதால் இந்த போட்டி திட்டமிட்டபடி அங்கு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறுநாட்டுக்கு மாற்றும் யோசனைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிப்பதால் குழப்பம் நிலவுகிறது.

இதனிடையே இந்த தொடரை பிரபலப்படுத்தும் வகையில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பையை ஒவ்வொரு நாட்டின் முக்கிய இடங்களுக்கும் காட்சிக்கு வைக்கப்பட ஐ.சி.சி. திட்டமிட்டிருந்தது. இந்த சுற்றுப்பயணம் பாகிஸ்தானிலிருந்து தொடங்குவதாக இருந்தது.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோப்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஸ்கர்து, ஹன்சா, முசாபராபாத் ஆகிய இடங்களுக்கும் கொண்டு செல்வதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் எதிரொலியாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கோப்பையை எடுத்து செல்லும் திட்டத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தடை விதித்தது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த சுற்றுப்பயணம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து இன்று தொடங்குகிறது.

கோப்பை சுற்றுப்பயண அட்டவணை:

நவம்பர் 16 - 25 - பாகிஸ்தான்

நவம்பர் 26- 28 - ஆப்கானிஸ்தான்

டிசம்பர் 10-13 - வங்காளதேசம்

டிசம்பர் 15-22 - தென் ஆப்பிரிக்கா

டிசம்பர் 25 - ஜனவரி 5 - ஆஸ்திரேலியா

ஜனவரி 6-11 - நியூசிலாந்து

ஜனவரி - 12 - 14 - இங்கிலாந்து

ஜனவரி 15 - 26 - இந்தியா

Excitement for the upcoming Men's Champions Trophy 2025 builds up, as the Trophy Tour kicks off in Islamabad https://t.co/QfQJesYVRf

— ICC (@ICC) November 16, 2024
Read Entire Article