
மும்பை,
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் அரங்கேறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ந் தேதி) பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்தியாவின் ஆடும் அணியை முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தேர்வு செய்து அறிவித்துள்ளார். அதில் முகமது ஷமியை தேர்ந்தெடுக்காத அவர், வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளார். மேலும் ரிஷப் பண்ட்டை அவர் கீப்பராக தேர்ந்தெடுத்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா தேர்வு செய்த இந்திய அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ்.