சாம்சங் நிர்வாகத்தை கண்டித்து வரும் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்: சிஐடியூ அறிவிப்பு

4 months ago 15

காஞ்சிபுரம்: சாம்சங் நிறுவனத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை துறை ரீதியான இடமாற்றங்கள் செய்து, அவர்களை மிரட்டுவது போன்ற செயல்களில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி சிஐடியூ தொழிற் சங்கத்தினர் வரும் 19-ம் தேதி நிறுவன வளாகத்துக்குள் உண்ணாவிரதப் போராட்த்தில் ஈடுபட உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை 1000-க்கும் மேற்பட்டோர் கடந்த செப்டம்பர் மாதம் ஊதிய உயர்வு, தொழிற் சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 30 நாட்களுக்கும் மேலாக நீடித்தது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த, பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டு அக்டோபர் 14-ம் தேதி, வழக்கம் போல தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

Read Entire Article