சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

1 month ago 11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தது. 20 நாளாக தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் வேலை நிறுத்த போராட்டத்தில் கலெக்டர் தலையிட வேண்டி சாம்சங் தொழிலாளர்கள் 119 பேர் பேரணியாக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் சென்றனர். அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமணம் மண்டபத்தில் வைத்தனர்.

அதன்பின்னர் தொழிலாளர்கள் 116 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் தேரடி பகுதியில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, சாம்சங் தொழிலாளர் வேலை நிறுத்த போராட்ட விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வலியுறுத்தி சிஜடியு தொழிற்சங்கத்தினர் மாநில தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 500 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

 

The post சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 500 பேர் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article