சாமானியர்கள் வாழ்க்கை தரம் உயரும் 5 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரு மடங்காக அதிகரிக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார்

1 month ago 7

புதுடெல்லி: டெல்லியில் கவுடில்யா 3வது பொருளாதார மாநாடு நேற்று நடந்தது. இதில் பேசிய, ஒன்றிய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன், “ கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார செயல்திறன் வேகமாக அதிகரித்துள்ளது. 10 வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா,5வது பெரிய பொருளாதாரமாக இப்போது முன்னேறி உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எப்) கணக்குப்படி, தனிநபர் வருமானம் 2,730 டாலர் என்ற நிலையை அடைவதற்கு 75 வருடங்கள் ஆகியுள்ளது.

அதில் மேலும் 2000 டாலர் சேர்க்க இன்னும் 5 ஆண்டுகள் போதும். வரும் பத்தாண்டுகளில் சாமானியர்களின் வாழ்க்கை தரம் அபரிதமாக உயரும். இந்த காலக்கட்டம் இந்தியாவின் வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில்அரசு செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாகவும், கொரோனா பெருந்தொற்று மங்கியதன் காரணமாகவும் வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும்’’ என்றார்.

The post சாமானியர்கள் வாழ்க்கை தரம் உயரும் 5 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரு மடங்காக அதிகரிக்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article