சாத்தனூர் அணை  திறப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும் - தமிழக பாஜக

10 hours ago 2

சென்னை: “திமுக அரசு தனது அதிகார பலத்தையும், ஆள்பலத்தையும் பயன்படுத்தி, ‘சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தான் வெள்ள பாதிப்பு’ என்ற உண்மையை மறைக்கப் பார்க்கிறது. சாத்தனூர் அணை திடீரென திறக்கப்பட்டதற்கு பொறுப்பேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புகளுக்கு ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம் தான் காரணம் என்றாலும், சாத்தனூர் அணையில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் டிசம்பர் 2-ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில், எவ்வித முன்னெச்சரிக்கையும் விடுக்காமல், வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது மிக மிக முக்கியமான காரணமாகும்.

Read Entire Article