புதுடெல்லி,
ஜம்முகாஷ்மீர் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு நிதானித்து தமது பேச்சை தொடர்ந்த அவர், பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை உயிரோடு இருப்பேன் என்று பேசினார்.கார்கேவுக்கு பதிலடி தந்த உள்துறை மந்திரி அமித் ஷா, இது கண்டிக்கத்தக்க பேச்சு என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மக்களுக்கான நலத்திட்டங்களை செய்வதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தேசப்பற்று இல்லை என்பது அர்த்தமல்ல. நாட்டிற்கும், அரசியலமைப்பிற்கும் எதிராக உழைத்தது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினர்தான். எனவே அவர்கள் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆங்கிலேயர்கள் முன் அடி பணிந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவில் உள்ளனர். நாட்டுப்பற்று கொண்டவர்கள் காங்கிரசில் மட்டுமே இருக்கிறார்கள் என்றார்.