சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி முயற்சிக்கு கிடைத்த வெற்றி - செல்வப்பெருந்தகை

2 weeks ago 7

சென்னை,

இந்தியாவில் கடைசியாக 1931ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர், 2011ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்பட்டது. ஆனால், அதன் தரவுகள் வெளியிடப்படவில்லை.

2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனாவல் தள்ளிப்போன நிலையில், இனி நடத்தப்பட உள்ள அந்த கணக்கெடுப்பில் சாதி விவரமும் சேர்க்கப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. காங்கிரஸ், திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுள்ளது மத்திய அரசு.

இந்த நிலையில் , சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முயற்சிக்கு கிடைத்த வெற்றி என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தொடர் அழுத்தத்தின் விளைவாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, தலைவர் ராகுல்காந்தி முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.என தெரிவித்துள்ளார்

Read Entire Article