சென்னை,
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சட்டசபை 5வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தப்போவது இல்லை. ஆகவே மாநில அரசு அதனை நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என கூறினார்.
இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. பீகாரில் மாநில அரசு ஆய்வு நடத்தினார்கள். அதன் நிலை என்ன ஆனது?. இருப்பினும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்று கூறினார்.