சாகத்திய அகடாமி விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

2 weeks ago 6

சென்னை : சாகத்திய அகடாமி விருது பெற்றவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “சாகித்திய புரஸ்கார் 2025 இந்த ஆண்டிற்கான விருதுகளை பெற்ற இரு தமிழர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்! சாகித்ய அகாடமியின் 2025 ம் ஆண்டு தமிழ் மொழிக்கான “பால சாகித்ய புரஸ்கார் விருது” ‘ஒற்றைச்சிறகு ஓவியா’ என்ற சிறுவர் நாவலுக்காக திருவாரூர் மாவட்டம், விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சரவணன் அவர்களுக்கும் “கூத்தொன்று கூடிற்று” என்ற சிறுகதைத் தொகுப்புக்காக “யுவ புரஸ்கார் விருது” மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் திரு. லட்சுமிஹர் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

சாகத்திய அகடாமி விருதினை முதல் முதலாக தமிழ்நாட்டில் இருந்து மு.வரதராசனார் அவர்கள் அவர்களுடைய “அகல் விளக்கு” என்ற நாவலுக்காக 1961ம் ஆண்டு பெற்றார்கள் அதன் பிறகு பல்வேறு தமிழறிஞர்கள் அவருடைய படைப்புகளுக்காக இன்றுவரை சாத்திய அகடமியால் வழங்கப்படும் விருதுகளை வாங்கி குவித்து வரும் வேளையில் மேலும் தமிழகத்தைச் சேர்ந்த இந்த இருவரும் இந்த விருதுகளை பெற்றிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்! “இவ்வாறு தெரிவித்தார்.

The post சாகத்திய அகடாமி விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! : பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article