சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து

6 months ago 22

காந்தி நகர்,

மராட்டிய மாநிலம் தாதர் நகரில் இருந்து குஜராத்தின் போர் பந்தர் நகருக்கு சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தாதர் நகரில் இருந்து இன்று மாலை 3.30 மணியளவில் குஜராத்தின் கிம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

கிம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.

இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல், லூப் லைனில் பிற ரெயில்கள் இயக்கப்படுவதால் அப்பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.   

Read Entire Article