சவுதியில் உயிரிழந்தவரின் உடலை கொண்டுவர கோரிக்கை

8 hours ago 2

ராமநாதபுரம், மார்ச் 22: ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம், பரமக்குடி தாலுகா அக்கிரமேசி கிராமத்தைச் தேசிய ராணி என்பவர் அளித்துள்ள மனுவில், எனது கணவர் கோவிந்தசாமி (38) சவுதி அரேபியாவில் கனரக வாகன ஓட்டுனராக வேலை செய்து வந்தார். நேற்று திடீரென அவர் ஓட்டிய வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் அவர் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகும் என தெரிவித்துள்ளனர். எனவே எனது கணவரின் உடலை தாயகத்திற்கு கொண்டு வர வேண்டும், அவருக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை உரிய நிறுவனத்தில் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post சவுதியில் உயிரிழந்தவரின் உடலை கொண்டுவர கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article