சென்னை,
2006-ம் ஆண்டு வெளியான 'கேங்ஸ்டர்' திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத் . தனது முதல் படம் அபார வெற்றி பெற்றது அதுமட்டுமின்றி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அடுத்தடுத்து வோ லம்ஹே, பேஷன், குயின் என ஹிட் கொடுத்தார்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தற்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'எமர்ஜென்சி'படத்தில் நடித்திருக்கிறார். இப்ப்டம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கங்கனா, சல்மான் கான் ஒரு நல்ல நண்பர் என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,
"சல்மான் கான் எனக்கு ஒரு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், உங்களுக்குத் தெரியும், எப்படியோ அது நடக்கவில்லை, பார்ப்போம்' என்றார்.