சல்மான் கானின் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்கிறேனா? - நடிகை அஞ்சினி

3 months ago 14

மும்பை,

சஞ்சய் திப்பாதி இயக்கத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியான படம் 'பின்னி அண்ட் பேமிலி'. இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சினி. இவர் நடிகர் வருண் தவானின் உறவினரும் கூட. முன்னதாக, இவர் சல்மான் கான் நடிக்கும் 'சிக்கந்தர்' படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அஞ்சினி, சிக்கந்தர் படத்தில் இணைந்தது குறித்த கேள்விக்கு வேடிக்கையான பதில் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து அவர் , "அப்படியா? நான் நடிக்கலாமா?", என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

பின்னர், பணிபுரிய விரும்பும் நடிகர்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், 'எல்லோருடனும் பணியாற்ற விரும்புகிறேன். ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், விக்ராந்த் மாஸ்ஸி உள்ளிட்ட அனைவருடனும். நான் நிச்சயமாக வருணுடனும் பணியாற்றுவேன். நாங்கள் ஒன்றாக ஒரு படத்தில் நடிப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். யாராவது அந்த வாய்ப்பை கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்' இவ்வாறு கூறினார்.

Read Entire Article