சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

2 months ago 13

மும்பை,

பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மிரட்டல்காரர்கள் அவரிடம் இருந்து ரூ.5 கோடி கேட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் ஹெல்ப்லைனில் நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மிரட்டல் விடுத்தவர் மராட்டிய அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாகவும் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அவரைக் கொன்று விடுவோம் என்று அந்த செய்தியில் கூறியுள்ளார். இதனால் சல்மான் கானுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், இந்த கொலை மிரட்டல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது தெரியவந்தது. உடனடியாக கர்நாடக மாநிலத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு ஜல்ராம் பிஷ்னோய் (வயது35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மிரட்டல் விடுத்தது அவர்தான் என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர். முழுமையான விசாரணைக்கு பிறகு மிரட்டல் பின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article