சர்வர் பிரச்சினை: சென்னையில் தாமதமான விமான சேவை

8 months ago 57

சென்னை,

இந்தியா முழுவதும் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இணையதள சர்வர் நேற்று திடீரென பாதிப்படைந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பகல் 1 மணி முதல் புறப்பட்டு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு இணையதளம் மூலம் போர்டிங் பாஸ்கள் கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

இணையதள இணைப்பு ஒரே சீராக வராமல், விட்டு விட்டு வந்ததால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவசர ஏற்பாடாக போர்டிங் பாஸ்களை கையினால் எழுதி கொடுத்தனர்.

இதனால் சென்னையில் இருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களான திருச்சி, டெல்லி, பெங்களூரு, ஆமதாபாத், ஹூப்ளி, கோவா, சீரடி, மும்பை, புனே, கோவை, மதுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பின்னர் மாலையில் நிலைமை சீரானது.

 

Read Entire Article