சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

3 hours ago 2

ராய்ப்பூர்,

இந்தியாவில் நடைபெற்று வரும் முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று ராய்ப்பூரில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ப்இரையன் லாரா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

இந்தியா: சச்சின் (கேப்டன்), அம்பத்தி ராயுடு, பவான் நெகி, யுவராஜ் சிங், ஸ்டூவர்ட் பின்னி, யூசுப் பதான், இர்பான் பதான், குர்கீரத் சிங் மான், வினய் குமார், ஷபாஸ் நதீம், தவால் குல்கர்னி.

வெஸ்ட் இண்டீஸ்: பிரையன் லாரா (கேப்டன்), டுவைன் சுமித், வில்லியம் பெர்கின்ஸ், சிம்மன்ஸ், சாத்விக் வால்டன், தினேஷ் ராம்டின், ஆஷ்லே நர்ஸ், டினோ பெஸ்ட், ஜெரோம் டெய்லர், சுலீமான் பென், ரவி ராம்பால். 

Read Entire Article