சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்

2 weeks ago 4

 

கோவை, ஜூன் 28: சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவுப்படி, காந்திபுரம், மாநகர பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் கோவை மாநகர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சூர்யமூர்த்தி, மற்றும் காட்டூர் இன்ஸ்பெக்டர் சரவணன், கங்கா மருத்துவமனை தலைமை நிர்வாகி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டனர். மேலும், கங்கா செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு, போதை பொருள் பயன்பாட்டினால் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்றும், போதை பொருள் பயன்பாட்டினால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, மனநலம் பாதிக்கப்பட்டு செயலலிந்துவிடும் என்று நாடகம் நடத்தியும் மற்றும் நடனம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

 

The post சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் appeared first on Dinakaran.

Read Entire Article